Tuesday, January 6, 2009

முதல் பகுதி

(என் வாழ்வில் நடந்துள்ள சில அபூர்வமான உண்மை நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளேன் எழுத்து பிழைகள் இருந்தால் தயவுசெய்து மன்னியுங்கள்.)

மும்பை பட்டணத்தில் எனது வாழ்க்கை:

1985ம் வருடம் எனது B Com பட்டபடிப்பை முடித்துவிட்டு கடந்த 22 வருடங்களாக ACCOUNTANT பணியாற்றி வரும் நான், திருமணமாகும் முன் 1991ம் வருடம் மும்பை பட்டணத்தில் ஒரு நல்ல வேலையில் இருந்தேன. கைநிறைய வருமான ம்கவலையற்ற வாழ்க்கை மற்றும் தட்டி கேட்க ஆளில்லாத காரணத்தால் நிறைய மது குடிப்பது, சூதாடுவது, மற்றும் அனேக சினிமா பாடல்கள் பதிவது போன்ற எத்தனையோ கெட்ட பழக்கம் உள்ளவனாக மனம் போல வாழ்ந்து வந்தேன்.
.
மாந்த்ரீக வசிய மருந்தால் பயித்தியம் ஆனேன்:

அந்த சமயம் எனது பக்கத்து வீட்டில் ஒரு திருமணமான இளம்பெண் வசித்து வந்தாள். அவளுடன் எனக்கு பழக்கம் இருந்ததால் அவள் வீட்டில் இருந்து கொடுக்கும் உணவு பதார்த்தங்களை வாங்கி உண்பது வழக்கம். அவளுக்கு என்மீது பிரியம் ஏற்ப்பட்டது, எவ்விதத்திலும் நான் அவளைவிட்டு பிரிந்து போய்விடக்கூடாது என எண்ணிய அவள் ஒருநாள் எனக்கு கொடுத்த கேசரியில் பில்லிசூனிய மருந்தை வைத்து எனக்கு தெரியாமல் கொடுத்துவிட்டாள்.

.
சுமார் ஒரு வருடம் அவளோடு சமாதானமாக இருந்த காலம்எல்லாம் அந்த மருந்து எந்த தீங்கும் எனக்கு செய்யவில்லை. ஆனால் 1992ம் வருடம் நான் என் பெற்றோரின் வற்புருத்துதலால் திருமணம் செய்ய முடிவுஎடுத்தவுடன் அந்த மந்த்ரீக மருந்து மிக கொடூரமாக தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. என்னையும் மீறிய ஒரு பேய்சக்தி என்னுள் புகுந்து, என் புத்தியை குழப்பிவிட்டது! எதையுமே பலமுறை சிந்தித்து செய்யும் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாமல், அவளை ஒருநாள் பர்கமுடியவிட்டால்கூட ரோட்டில் நின்று பலபேர் முன்னால் கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், வேலைக்கு போக முடியாமல் கிட்டத்தட்ட பயித்தியம் போல் ஆகிவிட்டேன்.
.
மும்பையில் என்னுடன் தங்கியிருந்த எனது நண்பர்கள் என்னுடைய மோசமான நிலை கண்டு வருத்தப்பட்டு, நான் வரமட்டேன் என்று எவ்வளவோ பிடிவாதம் பிடித்தும் என்னை டாக்டர்களிடமும், மந்திரிப்பவர்களிடமும் அழைத்துசென்று பார்த்தும் ஒரு பலனும் இல்லாத காரணத்தினால், எனது சொந்த ஊராகிய தூத்துக்குடிக்கு கடிதம் போட்டுவிட்டு என்னை அப்படியே விட்டுவிட்டனர். என்ன செய்கிறதென்றே தெரியாமல் யாரிடமும் சொல்ல முடியாமல் கிட்டதட்ட இரக்கும் தருவாயை அடைந்த எனது மனதுக்குள், திடீர் என்று எதோ ஒன்று பேச ஆரம்பித்தது, அது என் மனதுக்குள் அமர்ந்துகொண்டு "வரும் செவ்வாய் கிழமை 1 மணிக்கு நீ சாகப்போகிறாய்" என திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தது. மிகவும் திகிலுடன் இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! யாரிடம் அதுபற்றி சொன்னாலும் "இவன் பயித்தியமாகிவிட்டான் ஏதோ உளறுகிறான்" என நினைத்து என்னை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.
.
இந்நிலையில் அந்த செவ்வாய் கிழமையும் வந்தது! எழும்ப முடியாமல் பெலனற்று படுத்துகிடந்த நான் இரவு சுமார் 10மணிக்கு மரணபயத்தோடு விழித்துகொண்டிருந்தேன். தூக்கம் இல்லாமல் பல நாள் கிடந்ததால், சிறிது கண் அயர்ந்த நான் பயங்கர பயமும் திகிலும் என்னை ஆட்கொள்ள எனது உயிர் என்னை விட்டு கொடூரமாக பிடுங்கப்படுவதை உணர்ந்தேன். என் நெஞ்சு பக்கத்திலிருந்து பிடித்து, என்னை ஏதோ ஓன்று தூக்கி தூக்கி போட்டது! ஒரே நடுக்கம்! உடனே துள்ளி எழுந்து எனது அறையில் என்னோடு தங்கி இருந்த எனது ஒரே நண்பரை எழுப்பினேன். அவர் கடுமையான ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு கிடந்தார். அவர் ஒரு RC கிறிஸ்தவர் ஆகையால் அவரிடம் சிலுவை இருக்கும் என நினைத்து சிலுவை இருந்தால் கொடுங்கள் என கேட்டேன். ஏனெனில் நான் முன்பொருநாள் பார்த்த ஒரு பேய் படத்தில் சிலுவையை தொட்டவுடன் பேய் ஓடி விடுவதுபோல் இருந்ததால், என் உயிரை பறிக்க நினைக்கும் தீயசக்தி சிலுவையை பார்த்தாவது ஓடிவிடும் என நினைத்தேன். ஆனால் அவரால் சரியாக பேசகூட முடியவில்லை சிலுவை இல்லை என கூறிவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் சுமார் 12மணிக்கு லைட்டை போட்டுவைத்துக்கொண்டு பயங்கர திகிலோடு அங்கும் இங்கும் விழ்த்துக்கொண்டிருந்த எனக்கு மேல் பலகையில் இருந்த அந்த புத்தகம் கண்ணில் பட்டது.

.
அந்த புத்தகம் பற்றி சில வரிகள்:
இந்த சம்பவங்கள் நடப்பதற்கு சுமார் 7-8 மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் இரவு மும்பையில் பெரிய மழை பெய்து எங்கள் வீட்டின் முன்னால் இருந்த செம்பூர்-குர்லா ரயில் தண்டவாளத்தில் வெள்ளம் ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. காலையில் எழுந்து பல் துலக்கிக்கொண்டு திண்டின் மேல் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தநா நான், எனது காலுக்கு பக்கத்தில் ஒரு பெரிய புத்தகம் மிதந்து வருவதை பார்த்தேன். அதை காலால் தட்டிபார்த்தேன், அது போகாமல் என் காலுக்கு பக்கத்திலேயே கிடந்ததால் அதை கையில் எடுத்துப்பார்த்தேன். அது ஒரு பெரிய தமிழ் பைபிள். அனேக வேறு மொழி பேசும் மக்கள் வாழும் அவ்விடத்தில் தமிழ் பைபிள் வந்ததே ஒரு அதிசயமாக இருந்தது!

.

நான் இந்து மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் எல்லா மதத்தையும் மதிக்கக்கூடியவன், ஆகையால் அந்த பைபிளை அந்த மோசமான நீரில் திரும்பபோட மனதில்லாமல் எங்கள் வீட்டு அச்பெஸ்டாஸ் கூரை மீது தூக்கி வீசினேன் பிறகு அதை மறந்துவிட்டேன். பின்பு வெயில் காலத்தில் ஒருநாள் தற்செயலாக அந்த புத்தகம் கண்ணில் படவே அதை தூக்கி வீடில் உள்ளே உள்ள மேல் பலகை ஒன்றில் போட்டு வைத்தேன். அதை ஒருநாள் கூட மதித்து எடுத்து பார்த்ததும் கிடையாது. அந்த புத்தகம் தான் இப்பொழுது எனது கண்ணில் பட்டது.

.

தண்ணீரில் தத்தளிக்கும் ஒருவன் எது கையில் கிடைத்தாலும் அதை பிடித்து தப்பிக்க நினைப்பது போல, இது என்னை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பில் உடனே அந்த பைபிளை கையில் எடுத்தேன். எத்தனையோ இந்து சாமிகள் இருந்தும் எதுவும் என்னை காக்க முடியவில்லை கிறிஸ்தவர் எல்லோரும் இதைத்தான் வேதம் என்று சொல்கின்றனர், ஆனால் எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது! ஒருவேளை இதற்கு எதாவது சக்தி இருக்குமானால் என்னை இந்த மரணத்தில் இருந்து விடுவிக்கட்டும். இல்லை இதையும் மீறி என் உயிர் போகுமானால் போகட்டும் என நினைத்து அந்த பைபிளை தலையின் கீழ்வைத்து படுத்துவிட்டேன். படுத்து சிறிது நேரத்தில் நன்றாக தூங்கியும் விட்டேன்.
.
மறுநாள் காலையில் கொஞ்சம் லேட்டாக எழுந்து பார்த்த போது எனது உடம்பு மனது எல்லாம் மிகவும் லேசானது போல் இருந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மந்த்ரீக மருந்து கொடுத்த அந்த பெண் அப்படியே ஒரு பேய் போல தெரிந்தாள். என்னோடு மிகவும் பழக்கமாக இருந்த அவள் என்னை பார்த்ததும் காரி துப்பிவிட்டு வீட்டுக்குள் ஓடி விட்டாள். எனக்கு என்ன காரணம் என்றே புரியவில்லை நான் பைபிளை எடுத்தால் இவள் ஏன் காரி துப்பிவிட்டு ஓடுகிறாள்? என்று ஒரே குழப்பமாக இருந்தது. . ஆனால் என் மனதில் எதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி மற்றும் சந்தோசம் நிறைந்திருந்ததால், அந்த பைபிளில் எதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை மட்டும் நன்றாக புரிந்துகொண்டேன்.
.
இவ்வளவு நாள் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? இருந்தால் இந்த உலகம் என் இப்படி தீமையாலும் கொடூரத்தினாலும் நிறைந்திருக்கிறது. உலகில் தீமையை அனுமதித்தது யார்? என்றெல்லாம் பல கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தேன். நோயினாலும் உணவில்லாமலும் சாகும் தறுவாயில் மும்பை ரோடுகளில் கிடந்தது மிகவும் சங்கடப்படும் பிட்சைகாரர்களை பார்த்து பலநேரம் வேதனையை அடக்கமுடியாமல் மிகவும் அழுதிருக்கிறேன். கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் படைத்த மனிதர்களை இப்படியெல்லாம் தவிக்க விடுவாரா? என்ற ஆதங்கத்தில், கடவுள் என்று யாருமே இல்லவே இல்லை என முடிவு எடுத்திருந்த எனக்கு நடந்த காரியங்கள் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

.

ஏசு கிறிஸ்துவை பற்றி என்னிடம் அநேகர் சொல்வதுண்டு அவர்களிடம் ம் நான் கேட்கும் கேள்வி "ஏசு பாவத்துக்காக மரித்தார் என சொல்கிறீர்கள் ஆனால் இந்த உலகில் பாவம் எதுவும் குறைந்த மாதிரி தெரியவில்லையே! ஏசுவை ஏற்றுகொண்டவர்களும் கூட அனேக பாவம் செய்கின்றனர் அவர்களுக்கும் மற்றவர்கள் போலத்தான் நடக்கிறது விசேஷமாக என்ன இதில் இருக்கிறது? என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாவிட்டாலும், செத்தபின் நரகம் அது இது என்று சொல்வார்கள். உடனே நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று தெரியாத பட்சத்தில் நான் அவரை ஏற்று கொள்வதினால் என்ன பயன்,. சரி இயேசுதான் நமது பாவத்துக்காக மரித்தார், அவர் சீஷர்கள் பேதுரு போன்றவர்கள் யாருக்காக சிலுவையில் மரித்தனர்?.அவர்களை ஏன் இயேசுவால் காப்பாற்றமுடியவில்லை? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு நிராகரித்துவிடுவன். ஆனால் இப்பொழுதும் நான் எதையும் நம்பவிட்டலும் இந்த பைபிளில் ஏதோ சக்தி இருப்பதுபோல் மட்டும் எனக்கு தெரிந்தது!
.
அழுகையுடன் தொடர் வேண்டுதல்:
எனக்கு இவ்வளவு நடந்தும்கூட இது உண்மையா அல்லது எதாவது
மனபிரம்மையா என ஒரே குழப்பமாக இருந்தது. அனாலும் என் மனதில் ஏற்பட்டிருந்த என்றுமில்லாத சந்தோசம் மற்றும் புத்துணர்வால் இந்த புத்தகத்தில் எதோ ஒன்று இருக்கிறது என்று மட்டும் தெளிவாக தெரிந்தது. எனது அறை நண்பர் காலையிலே எங்கோ வெளியே கிளம்பி பொய் விட்டிருந்தார்! உடனே நான் அறை கதவை உள்புறம் பூட்டிக்கொண்டு அந்த பைபிளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டேன். ஆண்டவரே நீர் யார் என்று எனக்கு தெரிய வேண்டும். நீர் உண்மையில் இருக்கிறீரா? இல்லையா? அப்படி இருந்தால் உமது பெயர் என்ன இந்து சாமியில் எந்த சாமி? எங்கள் குல தெய்வம் அய்யனாரா ? அல்லது இயேசுவா? இல்லை இஸ்லாம் சகோதரர் சொல்லும் அல்லாவா? நீர் யார் என்று எனக்கு தெரிய வேண்டும் என்று வாயால் சத்தமாக சொல்லி மிகவும் அழுது கண்ணீரால் அந்த பைபிளை நனைத்தேன்.

அழுதேன் அழுதேன் அழுதுகொண்டே இருந்தேன் அரை மணி ஒரு மணி இரண்டு மணி எதுவும் தெரியவில்லை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தொடர்ச்சி ..... 2ம் பாகம்

3 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in